Wednesday, December 05, 2012
நியூயார்க்::பயங்கரவாத தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் பல்வேறு பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளால் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் 1991 ராஜீவ் காந்தி கொலை, தற்கொலைப்படை தாக்குதல்கள், கார்குண்டு தாக்குதல்கள் என நடந்து வருகிறது.கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் , அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினரால் தாக்குதலுக்குள்ளானது. அதைத்தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா- ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார மற்றும் அமைதிக்கான மையம் , மேரிலாண்ட் பல்கலை.யில் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து உலக அளவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆய்வினை மேற்கொண்டன. மொத்தம் 158 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு :கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் 2002-ம் ஆண்டு உலக அளவில் 982 தாக்குதல்கள் நடந்தன. இதில் 3 ஆயிரத்து 283 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் 2007-ம் ஆண்டு ஈராக்கில் நடந்த தாக்குதல் துவங்கி 2011-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இதுவரை 7,473 பேர் பலியாகியுள்ளன.தவிர இந்தியா, பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், ஏமன் ஆகியன பயங்கரவாத தாக்குதல்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்ப்டட ஐந்து நாடுகள் ஆகும். மேலும் 31 நாடுகளில் எந்தவி பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக தகவல் இல்லை. இவற்றில் வட அமெரிக்க நாடுகளில் தான் மிகமிக குறைவு எனவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெறும் 19 தாக்குதல்கள் தான் நடந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேரிலாண்ட் பல்கலை.யின் அரசியல் -பொருளாதார மற்று்ம் அமைதிக்கான ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக தலைவர் ஸ்டீர் கில்லிலியா, கூறுகையில்,2001-ம் ஆண்டு தாக்குதலுக்கு பின்னர் ஈராக் நாட்டில் தான் பெருமளவு தாக்குதல்களும், உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன என்றார்.


No comments:
Post a Comment