Monday, December 3, 2012

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப முடியும் - ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஜெனீவா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க!

Monday, December 03, 2012
ஜெனீவா::புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஜெனீவா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எந்தவிதமான ஆபத்துக்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச குடிப்பெயர்வாளர் பேரவையின் 101ம் அமர்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டவர்கள் நாடு திரும்ப வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் பாரியளவில் மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக வெளிநாடுகளில் புகலிடம் கோரும் இலங்கையர்கள் பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்பதனை சில நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் ஆபத்துக்கள் குறித்து உலக நாடுகள் போதியளவு விளக்கமளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment