Thursday, December 06, 2012
இலங்கை::குற்றவியல் பிரேரணை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னால் மூன்றாவது தடவையாக முன்னிலையாகவுள்ளார்
இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நான்காவது தடவையாக கூடவுள்ளது
இதேவேளை தம்மீது சுமத்தப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதம நீதியரசர், சமர்ப்பித்துள்ள பதில்களின் அடிப்படையில் உரிய நிறுவனங்களிடம் இருந்து வங்கி ஆவணங்கள் உட்பட்ட அறிக்கைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு நேற்று தருவித்தது
இந்த ஆவணங்கள் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள 11 பேருக்கும் இந்த ஆவணங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட தெரிவுக்குழு தொடர்பான ஊடக செய்திகள் குறித்து சிறப்புரிமை பிரச்சினை- பிரியதர்ஷன யாப்பா!
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வழிகாட்டல்களை வழங்குமாறு அமைச்சர் அக்ராசனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அவ்வாறு தகவல்கள் வெளியிடப்பட்டால் அது பிரதம நீதியரசருக்கு பாதகமாக அமையும் என அமைச்சர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள நிலையியற் கட்டளைகளுக்கு அமைய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.
இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment