Thursday, December 06, 2012
இலங்கையில் 2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்த கண்டறிதல்கள், மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன
ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்காலத்தில் ஐக்கிய நாடுகள் செயற்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
இதன்காரணமாகவே பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன என்று அடிப்படையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் அதிகாரி சார்ல்ஸ் பெற்றீ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் வருத்தத்தை வெளியிட்டிருந்தார்
இந்தநிலையிலேயே குறித்த அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பிரதி செயலாளர் ஜான் எலியாசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக மார்டின் நெசர்க்கி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment