Monday, December 03, 2012
இலங்கை::கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக (புலி ஆதரவு) மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோனுடன் நேற்று முற்பகல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தொலைபேசியூடாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில், கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பாக வினவியபோது, தமக்கு இக்கைதுகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை எனக்கூறிய பொலிஸ் மா அதிபர், 5 நிமிடங்களின் பின்னர் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கூறி 30நிமிடங்களின் பின்னர் அழைப்பினை ஏற்படுத்தி கருத்துக்களை தெரிவித்ததாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து பேசிய பொலிஸ் மா அதிபர், கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களும் தற்போது வவுனியா சிறைச்சாலையில் இருப்பதாகவும் அவர்களின் கைதுதொடர்பான பற்றுச்சீட்டுக்கள் அம்மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்மாணவர்களை பல்கலைக்கழக துனைவேந்தர், பதில் துனைவேந்தர் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலை வரான பரந்தாமன் சபேஸ்குமாரையும் கைதுசெய்வதற்காக அவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிஸார் சென்றுள்ளனர்.
எனினும் அங்கு அம்மாணவன் இல்லாத நிலையில் பெற்றோரை விசாரித்த பொலிஸார் காலை 9 மணிக்குள் அவரை பொலிஸ் நிலையத்தில் ஒப்பகைடக்க வேண்டும் என்றும் தவறின் உங்களை கைதுசெய்வோம் எனபெற்றோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான இரா. சம்பந்தனின் கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர், இச்சம்பவம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
கார்த்திகைக 27ஆம் திகதி இந்துக்களின் சமய நிகழ்வான கார்த்திகை விளக்கீடு தினம் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டதால் பல்கலைக்கழக மாணவர்களை இராணுவம் கைதுசெய்ய முடியாது.
இவ்வாறு கைதுசெய்ததன் மூலம் பாரிய மனித உரிகைம மீறலை இராணுவம் மேற்கொண்டுள்ளதுடன், மதக்கோட்பாடுகளையும் அவமதித்துள்ளது. மேலும் மாணவர்கள் விடுதிகளுக்குள் இராணுவத்தின் பிரசன்னம் இல்லாதிருந்தால் இவ்வாறானதொரு நிகைலதோன்றியிராது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment