இலங்கை::அமைப்பின் கண்காணிப்பாளர்களை விசாரணைகளை பார்வையிட அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாராளுமன்றைத் தெரிவுக்குழு நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளை பார்வையிட பொதுநலவாய நாடுகள் அமைப்பு மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத் தெரிவுக்குழு நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும், நீதியான வகையிலும் நடாத்தப்படுவதற்கு இவ்வாறு மூன்றாம் தரப்பினரின் கண்காணிப்பு அவசியமானது என பிரதம நீதியரசரின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment