Wednesday, December 05, 2012
இலங்கை::வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இதுவரையில் சில சிறைக்கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 3,600 சிறைக் கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வி.எஸ்.விதானகே குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment