Wednesday, December 05, 2012
இலங்கை::வவுனியா - சிவபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாடசாலைக்குச் சென்றிருந்த சிறுமி வீடு திரும்பாமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவரது சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா - சிவபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment