Wednesday, December 5, 2012

அமெரிக்காவின் மூன்றாவது ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது

Wednesday, December 05, 2012
ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்றை அதன் வான்பரப்பில் வைத்து கைப்பற்றியுள்ளது.

தங்களது வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததனாலேய இவ்விமானத்தை கைப்பற்றியுள்ளதாக இன்று விமானப்படைப்பேச்சாளர் ஈரானிய தொலைக்காட்சியில் தெரிவித்தார் கைப்பற்றப்பட்ட விமானமும் காண்பிக்கப்பட்டது .

ஒருவருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆளில்லா உளவு விமானமொன்றை ஈரானிய போர் விமானங்கள் சுட்டு வீழ்தியதை தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையில் உறவு விரிசலடைந்தது.

பின்னர் மற்று மொரு அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை இரானிய வான்பரப்பில் வைத்து பத்திரமாக தரையிறக்கி அதன் தொழி நுட்பத்தை ஈரான் பெற்றுக்கொண்டது.

இதனை தொடர்ந்து மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க விமானத்தளத்திலிருந்து அனுப்பட்ட அணைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பஹ்ரைனிலுள்ள விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளதாக அமேரிக்கா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment