Thursday, December 13, 2012

இலங்கை, அவுஸ்திரேலியா இடையில் ஒன்றிணைந்த செயற்பாட்டுக் குழு!

Thursday, December 13, 2012
இலங்கை::இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் ஒன்றிணைந்த செயற்பாட்டுக் குழுவொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரினால் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பிற்கிணங்க அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக கருணாரத்ன அமுனுகம குறிப்பிட்டார்.

ஆட்கடத்தல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கைக்கான நிதியுதவிகள், பாதுகாப்பு நடைமுறைகள், சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment