Wednesday, December 12, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் வெலிகந்தை - கந்தகடுவ புனர்வாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 11 பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்களில் நால்வர் வெலிகந்தை புனர்வாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஏனைய 7 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment