Thursday, December 13, 2012
இலங்கை::பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் ‘கோல் டயலொக் – 2012’ என்ற உயர் மட்ட மாநாடு இன்று காலியில் ஆரம்பமாகிறது. ‘தந்திரோபாய கூட்டுறவுகள் மற்றும் கடற் பிராந்திய நடவடிக்கைகள் தொடர்பான சவால்களுக்கு ஒன்றினைந்து முகம்கொடுத்தல்’ என்ற தொனிப் பொருளில் இரண்டு (டிசம்பர் 13 மற்றும் 14) நாட்கள் காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கை கடற்படை, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த உயர் மட்ட பாதுகாப்பு மாநாட்டை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளதுடன் சிறப்புரையையும் நிகழ்த்தவுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இம் மாநாட்டில் அமெரிக்கா, ரசியா, பிரிட்டிஸ், கனடா, பிரான்ஸ் ஜேர்மன், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 28 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆழ்ந்த அனுபவமுள்ள பாதுகாப்பு மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் கட்டளைத் தளபதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments:
Post a Comment