Thursday, December 13, 2012

ஐ.நா.வுக்கான தணிக்கை குழு தலைவராக மீண்டும் வினோத்ராய் தேர்வு!

Thursday, December 13, 2012
புதுடில்லி::ஐ.நாவுக்கான வெளியுறவு தணிக்கை குழு தலைவராக வினோத்ராய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தணிக்கை கட்டுப்பாட்டு ஜெனரல் தலைவராக உள்ள வினோத்ராய், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்து பரபரப்பு அறிக்கையினை தாக்கல் செய்தார். பரபரப்பான இவரது அறிக்கையினால் மத்திய அரசின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இவரது கணக்கீடு தவறானது என பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி, மத்திய அமைச்சர்கள் வரை அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா.வுக்கான வெளியுறவு தணிக்கை குழுவின் தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டிருந்தார்.

இக்குழுவின் உறுப்பு நாடுகளான கனடா, சீனா, பிரான்ஸ், இந்தியா, இத்தாலி,பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் சுவிட்சர்லாந்து,தான்சானியா மற்றும் பிரிட்டன் ஆகியன உள்ளன.ஐ.நா.வின் வர்த்தக பரிமாற்றம் தொடர்பான வருடாந்திர ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலர் பான்கீ மூன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர் தற்போதுள்ள குழுவின் தலைவராக வினோத்ராய் மீண்டும் 2013-ம் ஆண்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், துணை தலைவராக பிரிட்டனைச் சேர்ந்த அம்மியாஸ் மூர்ஸி நியமிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment