Monday, December 03, 2012
அகமதாபாத்::குஜராத் சட்டசபை தேர்தலில் மணி நகர் தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மனைவி சுவேதா பட் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடையே பேசிய சுவேதா பட், அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதில் 'குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் ரீதியாக போராடும் எனக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். குறிப்பாக, மணி நகர் தொகுதியில் குஜராத் பரிவர்த்தன் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ள முன்னாள் முதல் மந்திரி கேசுபாய் பட்டேல், அந்த வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும். மோடிக்கு எதிரான அரசியல் யுத்தத்தை நான் எனக்காக மட்டும் நடத்தவில்லை. குஜராத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நான் போராடுகின்றேன். அரசியலமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து மணி நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள குஜராத் பரிவர்த்தன் கட்சி வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது. எனவே நரேந்திர மோடி - சுவேதா பட் ஆகிய இருவர் மட்டுமே பிரதான கட்சி வேட்பாளர்களாக நேரடியாக மோதுகிறார்கள். எனவே மணி நகர் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

No comments:
Post a Comment