Wednesday, December 5, 2012

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தில் 9பேர் கைது!

Wednesday, December 05, 2012
இலங்கை::பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தில் 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே இவர்கள் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கோப்பாய், சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலில் வைத்தே மேற்படி ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்காக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment