Wednesday, December 05, 2012
இலங்கை::இலங்கையின் 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அதனை வலுப்படுத்தும் முகமாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளையதினம் (06.12.2012) பிற்பகல் நாடாளுமன்ற குழுக்கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், தென்பகுதியைச் சேர்ந்த முற்போக்கு மற்றும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு கிழக்கு உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்க்கட்சி உறுப்பினர்கள், மற்றும் 13வது திருத்த அமுலாக்கத்தை வலியுறுத்தும் அமைச்சர்கள் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொள்வார்கள் செய்திக் குறிப்பொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தீர்வுகாணப்படவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்ததுடன் அதன் அமுலாக்கத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் எனவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment