Thursday, December 06, 2012
சென்னை::ஊழல் கண்காணிப்பு அட்டவணையின் படி இந்தியா ஊழலில் மொத்தம் உள்ள 176 நாடுகளில் 94-வது இடத்தில் இருப்பதாக டிரான்ஸ்பிரன்சி இண்டர்நேசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா அண்டை நாடுகளான சீனா, இலங்கையை விட தர வரிசையில் முன்னால் இருந்தாலும், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இரான் நாடுகளை விட பின்னால் தான் இருக்கிறது.
இந்த ஆண்டு இந்தியா மோசமான தரவரிசைப் பட்டியலுக்கு வரக் காரணம் சமீபத்தில் நடந்த ஊழல்கள், பொதுத்துறையில், அரசாங்கத்தில், தனியார் நிறுவனங்களில் நடந்த ஊழல்களே ஆகும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
டிரான்ஸ்பிரன்சி இண்டர்நேசனலின் தரவுகள், உலக வங்கி மற்றும் உலகப் பொருளாதாரப் பொதுமன்றம் ஆகிய அமைப்புகள் உள்ளிட்ட 10 சுதந்திரமான அமைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

No comments:
Post a Comment