Thursday, December 06, 2012
சென்னை::தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டின மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து, போராட்டத்தை தற்காலிமாக கைவிட்டுள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் வரும் 10ம் திகதிக்குள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10ம் திகதிக்கு மேல் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment