Monday, December 03, 2012
டோக்கியோ::ஜப்பான் சுரங்க பாதையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக ஆனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜப்பானின் யமனாஷி மாகாணம், சுவோ எக்ஸ்பிரஸ் சாலையில் சசாகோ என்ற சுரங்க பாதை உள்ளது. முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்க பாதையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். விடுமுறை நாளான நேற்று காலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சுரங்க பாதையின் நடுவில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கார்கள் மீது இடிபாடுகள் விழுந்தன. இதனால் வாகனங்கள் அடுத்தடுத்து சுரங்க பாதைக்குள் மோதி தீப்பிடித்தன.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்றனர். சுரங்க பாதைக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதற்கிடையில் தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உள்ளே சிக்கிய வாகனங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது இன்று அதிகாலை மேலும் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆனது. இதுகுறித்து சுரங்க பாதையை பராமரிப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், Ôகடந்த செப்டம்பர் மாதம்தான் சுரங்க பாதையை முழுவதுமாக சோதனை செய்தோம். அப்போது எதுவும் தெரியவில்லைÕ என்று கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment