Thursday, December 06, 2012
சென்னை::பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பயணிகள், பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விமான நிலையத்துக்குள் நுழையும் வாகனங்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களை நீண்ட நேரம் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
விமான நிலைய நுழைவு வாயில்களில் அதிநவீன காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். மேலும் மாறு வேடத்திலும் போலீசார் கண்காணித்தனர். பயணிகளை வரவேற்கவும், வழியனுப்பவும் பார்வையாளர்கள் விமான நிலையத்துக்குள் நுழைய இன்று அதிகாலை முதல் தடை விதிக்கப்பட்டது. அவர்கள் `கார் பார்க்கிங்' இடத்துடன் நிறுத்தப்பட்டனர்.
சனிக்கிழமை வரை 3 நாள் இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பயணிகள் அனைவரும் 2 முறை தீவிர சோதனைக்கு பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment