Monday, December 03, 2012
மாஸ்கோ::ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடும் பனிப்பொழிவு காரணமாக, போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. 200 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் சிக்கியதால் 2 நாட்களாக மக்கள் தவித்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் இடுப்பளவு பனி குவிந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆயிரக்கணக்கான டிரக்குகள், கார்கள் ஸ்தம்பித்து நின்றன.
200 கி.மீ. தூரம் வரை சாலைகளில் வாகனங்கள் நின்றதால் மக்கள் பரிதவித்தனர். மேலும், வாகனங்களில் சென்ற சரக்குகள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்று பல கம்பெனிகள் புகார் தெரிவித்து வருகின்றன. கேஸ், குடிநீர் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பனி காலத்தில் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளனர். டுவேர் பகுதியில் பனிப்பொழிவு வழக்கத்துக்கு மாறாக காணப்படுகிறது. இங்கு புல்டோசர்கள் மூலம் சாலையில் குவிந்து கிடக்கும் பனியை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment