Monday, November 5, 2012

அவுஸ்திரேலியா சென்றவர்கள் மீள இலங்கை திரும்ப இணக்கம்!

Monday,November 05, 2012
இலங்கை::அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா சென்று நவ்ருத் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் 11 பேர் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் 126 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற சட்டத்தின் படி, படகு மூலம் செல்பவர்கள் நவ்ரூ அல்லது பாப்புவா நியூ கினியா தீவுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தற்போது நவ்ரூ தீவில் 377 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 5 பேரும் நேற்று 6 பேருமாக கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இதனிடையே, சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த அம்பலாந்தொட, லுனம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மற்றும் சிறுவர்கள் இருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஏனைய இரண்டு ஆண்களும் எதிர்வரும் 12 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்..

ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கிரிந்த கடற்பிராந்தியத்தில் இருந்து நேற்று அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment