Monday, November 5, 2012

கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கம் இன்னும் மௌனமாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது!

Monday,November 05, 2012
இலங்கை::தமிழகத்தில் நிர்மானிக்கப்படுகின்ற கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கம் இன்னும் மௌனமாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரவிந்திர காரியவசம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த மின்னுற்பத்தி நிலையத்தினால் இலங்கையின் சுற்றாடலுக்கும், மக்களுக்கும் கதிர்வீச்சி அபாயங்கள் இருக்கின்றன.

இது தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கமளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment