Monday, November 5, 2012

கொழும்பு மோசடி பிரிவின் உளவு பிரிவு மனிதவள குறைவினால் மூடப்பட்டுள்ளது என வெளியான செய்திகளை மறுத்துள்ள பொலிஸ் தலைமையகம் அந்த பிரிவு பலப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது!

Monday,November 05, 2012
இலங்கை::கொழும்பு மோசடி பிரிவின் உளவு பிரிவு மனிதவள குறைவினால் மூடப்பட்டுள்ளது என வெளியான செய்திகளை மறுத்துள்ள பொலிஸ் தலைமையகம் அந்த பிரிவு பலப்படுத்தப்படும் எனஅறிவித்துள்ளது.

இதுதொடர்பில் பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. பிரசாந்த ஜயகொடிதெரிவிக்கையில்,

இந்த பிரிவு மூடப்படவில்லை. அப்பிரிவு தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான மேலதிக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வளங்கள் வழங்கப்படும். தற்போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இந்த பிரிவில் கடமையாற்றுகின்றனர். எனினும் மனிதவள குறைவினால் செயற்பாடுகள் தாமதமாகின்றன.

உளவு பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் தொலைபேசி நிலைய உரிமையாளரிடமிருந்து சுமார் 5 மில்லியன் ரூபாவை பெற முற்சித்த போது குற்றப்புலனாய் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து இந்த பிரிவு மூடப்பட்டது என செய்தி வெளியாகியிருந்தது. சுமார் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களைகொண்ட இந்த பிரிவுதொலைபேசி நிலையங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment