Saturday, November 3, 2012

பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென முரண்டு பிடித்ததால், முதல்வரை சந்திக்க கடிதம் அனுப்புவதை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று தவிர்த்தனர்!

Saturday, November 03, 2012
சென்னை::பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென முரண்டு பிடித்ததால், முதல்வரை சந்திக்க கடிதம் அனுப்புவதை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று தவிர்த்தனர்.

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர், முதல்வரை சந்தித்து பேசினர். இது அரசியல் மட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை சென்ற, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்திப்பது நாடகம், அதை நான் முடிவுக்கு கொண்டு வருகிறேன்' என, தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பிரச்னை தொடர்பாக, முதல்வரை சந்திக்கவேண்டும் என்று கூறி சபாநாயகரிடம் மனுக் கொடுத்தனர். தொடர்ந்து இரண்டாம் நாள், சட்டசபை விடுமுறை என்பதால், முதல்வர் அலுவலகம் சென்று, மேலும் ஐந்து தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கொடுத்தனர்.அவர்களது கடிதம் ஏற்கப்படாததால், பதிவு தபாலில் அதை அனுப்பினர். முதல்வரை சந்திக்க கடிதம் கொடுத்த விவகாரம், சட்டசபை உரிமைமீறல் குழு விசாரணைக்கு அனுப்பபட்டது.

இருப்பினும், தொடர்ந்து ஐந்து பேர் வீதம், பதிவு தபாலில் முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். அவ்வாறு, நேற்று முன்தினம் வரை, 20 தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்திக்க கடிதம் அனுப்பியிருந்தனர்.

தே.மு.தி.க., தலைமை திட்டப்படி, கடைசி நாளான இன்று, பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன், பாபு முருகவேல் உள்ளிட்ட, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்திக்க கடிதம் அனுப்ப இருந்தனர். ஆனால், நேற்று அத்திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

முதல்வரை சந்திக்க கடிதம் கொடுக்கமாட்டேன் என, பண்ருட்டி ராமச்சந்திரன் முரண்டு பிடித்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் மனுக்கொடுத்தால், அது சர்ச்சையையும், கட்சியில் சலசலப்பையும் ஏற்படுத்தும் என்பதால், கடைசி நாளில் கடிதம் அனுப்புவது தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது.கடிதம் கொடுத்த அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், சபை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே, மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.இதுகுறித்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பாபு முருகவேல் மற்றும் பாண்டியராஜன் ஆகி@யார் கூறுகையில், "கட்சி தலைமை உத்தரவு வராததால், முதல்வரை சந்திக்க கடிதம் அனுப்பவில்லை. இதுகுறித்த கூடுதல் விவரங்களை, கட்சி தலைமையிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும்' என்றனர்

No comments:

Post a Comment