Saturday, November 03, 2012
ஜெனீவா:.இலங்கையில் தற்சமயம் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக மேலும், கால அவகாசம் தேவை என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அமர்வின் போது நாடுகள் சில இதனை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் 99 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இதன்போது, இலங்கை குழவினர், தற்போதைய இலங்கை நிலபரங்கள் தொடர்பாக தெளிவு படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என சில நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் வளர்ச்சி தொடர்பாக ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் மகிழ்ச்சியை வெளியிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அமெரிக்கா, பிருத்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகள் யுத்தத்தின் பொறுப்புக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்தும் கேள்வி எழுப்பியதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்......
ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அமர்வில், இலங்கை தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்;டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
இலங்கை தொடர்பான அமர்வு இடம்பெற்ற போது அமரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் என்பன இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சித்திரவதைகள் உட்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன
எனினும் ரஸ்யா, சீனா ஈரான்,பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்தன
போருக்கு பின்னர் இலங்கையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்த நாடுகள் குறிப்பிட்டன
இந்தநிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment