Saturday, November 3, 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது - திவயின!

Saturday, November 03, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெற்று வரும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில், அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் ஆரம்பமான மனித உரிமை மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்க தூதுவர் ஐரின் டெனதோ, இலங்கையின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

வடக்கில் தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் வைத்திருப்பதாக கூறியுள்ள அவர், அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கும் பணிகளை சிவில் அமைப்புகளுக்கு வழங்குவது, போர் குற்றங்கள் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் பணிகளை சர்வதேச கட்டமைப்பிடம் வழங்குதல், அததிகார பரவலாக்கல் போன்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் அமெரிக்க தூதுவர் விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment