Saturday, November 03, 2012
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 26பேரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் டப்ளியூ.கே.துலானி எஸ்.வீரதுங்க உத்தரவிட்டார்.
திருகோணமலை, தெவுந்தர மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பேருவளை தெவுந்தர ஆகிய பிரதேசங்களிலிருந்து சாந்த ஜுட்இ சயூரி ராஜா என்ற பெயர்களைக் கொண்ட ரோலர் படகுகளில் சட்டவிரோதமாக இவர்கள் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களை பொறுப்பேற்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment