Saturday, November 03, 2012
சிட்னி::அவுஸ்திரேலியாலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மேலும் 26பேர் நேற்று பகல் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த வாரம் முற்பகுதியில் படகுகள் மூலம் கிறிஸ்மஸ் மற்றும் கொக்கோஸ் தீவுகளைச் சென்றடைந்தவர்களே திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் கிறிஸ்மஸ் போவான் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நோக்கத்தோடு அகதி அந்தஸ்து கோருவோரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அகதிகள் அந்தஸ்த்தை பெறுவதற்கு தேவையான தகைமைகளை உறுதிப்படுத்த தவறுவோர் எதிர்காலத்திலும் ஏற்றுக்கொள்ளபட மாட்டார்கள் என சிட்னியில் ஊடகவியலாளர்களிடம் போவான் கருத்து வெளியிட்டதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப் பகுதியில் 116 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பபட்டுள்ளனர்.
இவர்களில் சுயவிருப்பத்துடன் நாடு திரும்பியவர்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment