Wednesday, November 07, 2012
இலங்கை::வடமாகாண முதலமைச்சு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை . தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு!
வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், வடமாகாண முதலமைச்சு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
(புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், த ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சு வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வித்தியாதரனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் இதனை நிராகரித்த சம்பந்தன், இதுவரையில் இந்தவிடயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்து.
எனினும் சர்வதே நாடுகளின் அழுத்தம் காரணமாக அது முன்னதாகவே நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எப்போது தேர்தல் நடந்தாலும், அதற்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment