Wednesday, November 7, 2012

திவிநெகும: வறுமையை நீக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலம் - அமைச்சர் பஷில் ராஜபக்ஷ!

Wednesday, November 07, 2012
இலங்கை::வறுமையை உரிமையாக கொண்டிருக்கும் மக்களை வறுமை யிலிருந்து மீட்டு அபிவிருத்தியின் பங்காளிகளாக இணைத்துக்கொள் ளும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டமூலமே திவிநெகும சட்டமூலம் என பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலவச கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்து வதற்காக சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா கொண்டுவந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்கள் போன்று இந்த சபையில் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவை போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலமாக திவிநெகும சட்ட மூலம் உள்ளது.

இன்று சமர்ப்பிக்கப்படுகின்ற சட்டமூலம் இரண்டு தடவைகள் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன் திவிநெகும சட்டமூலம் நாட்டு மக் கள் மத்தியில் போதியளவு விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாகாண சபைகளில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப் பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் முஸ் லிம் காங்கிரஸ் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாக வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஒத்துழைப்பை மறந்துவிட முடியாது.

திவிநெகும சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்துப் பேசிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ திவிநெகும சட்டமூலம் எந்த நிறுவனத்தின் அதிகாரத்தையும் ஒருபோதும் பாதிக்காது என்றார். வறிய மக்களுக்கு உதவுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

எனவே, இந்த நாட்டு மக்களிடம் குறிப்பாக வடக்கு மக்களிடமும் சகல அரசியல் கட்சிகளிடமும் இச் சட்டமூலத் திற்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.

No comments:

Post a Comment