Wednesday, November 07, 2012
கரூர்::கரூர் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில், இரு
தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், முகாமை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அண்ணன் இறந்தார்.
கரூர்::கரூர் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில், இரு
தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், முகாமை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அண்ணன் இறந்தார்.
கரூர் அருகே ராயனூரில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்கு வசிப்போர், கரூரில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். முகாமில் வசிக்கும் சுதாகர், 25, சின்னவர் (எ) ஜெயபிரகாஷ், 24, ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்று மோதிக் கொண்டனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெயபிரகாஷ், தன் தம்பி தமிழ்ச்செல்வனிடம், 22, பிரச்னை குறித்து கூறியுள்ளார். அதேபோல் சுதாகரும், தன் அண்ணன் செல்வம் (எ) நிலாதரனிடம், 28, மோதல் குறித்து கூறியுள்ளார். இருதரப்புக்கும் இடையே நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், முகாம் வாயிலில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முற்றி, கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், செல்வம் தன்னிடமிருந்த கத்தியால், ஜெயபிரகாஷை குத்தியுள்ளார். அதை தடுக்கச் சென்ற ஜெயபிரகாசின் தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்துபட்ட ஜெயபிரகாஷ், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தமிழ்ச்செல்வன், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கத்திக்குத்து சம்பவம் குறித்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment