Wednesday, November 7, 2012

இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா செல்பவர்களுள், சிலர் பொருளாதார நோக்கத்துடனே அரசியல் தஞ்சம் கோரிச் செல்வதாக சர்வதேச குடிப்பெயர்வுகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது!

Wednesday, November 07, 2012
இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா செல்பவர்களுள், சிலர் பொருளாதார நோக்கத்துடனே அரசியல் தஞ்சம் கோரிச் செல்வதாக சர்வதேச குடிப்பெயர்வுகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த கருத்தை வெளியிட்டது.

தற்போது இந்த கருத்துக்கு சர்வதேச குடிப்யெர்வுகளுக்கான அமைப்பு ஆதரவை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் இலங்கையில் இருந்து செல்லும் அதிகளின் எண்ணிக்கை 25 மடங்கால் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையில் 5 ஆயிரத்து 300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச குடிப்பெயர்வுகளுக்கான அமைப்பின் இலங்கைத் தலைவர் ரிச்சட் டன்சீகர், த ரேடியோ அவுஸ்திரேலியாவுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கையின் கடல் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் காலத்தில் கடல்மார்க்க பாதுகாப்புகள் இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டன.

எனினும் தற்போது மீன்பிடிக்கு இலங்கை கடற்பரப்பில் முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இலகுவாக அகதிப் படகுகள் இலங்கை எல்லையை தாண்டி பயணிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இலங்கையில் இருந்து தற்போது பயணிக்கின்ற அகதிகளில் சிலர், பொருளாதார நலன் கருதியே அவுஸ்திரேலியா செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment