Sunday, November 04, 2012
இலங்கை::சென்னை நீதிமன்றினால் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு இலங்கை கடறப்டையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாக்கு நீரிணையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு தற்பாதுகாப்பு நோக்கத்திற்காக துப்பாக்கிகள் எனக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இலங்கைக் கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் தமிழக மீனவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, இந்திய மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். எனினும், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதனை தவிர்க்க வேண்டுமென கோரியுள்ளனர்.
ஆயிரக் கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment