Sunday, November 04, 2012
இலங்கை::சூளைமேட்டில் துப்பாக்கி பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணையை அவர்கள், தமிழகம் தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் நடத்தினால் அதை எதிர்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும், சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் அங்கு இடம்பெற்ற உண்மை நிலைமையினை தெளிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு யாழ்நகரின் ஸ்ரான்லி வீதியிலுள்ள சிறீதர் திரையரங்க அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை அரசினது திவிநெகும திட்டத்தை கூட்டமைப்பு எதிர்ப்பதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர் அங்கு வரவழைக்கப்பட்டிருந்த யாழ்.மாவட்ட சமுர்த்தி தலைமை அதிகாரி ரகுநாதனை விளக்கங்களை அளிக்குமாறும் பணித்துக்கொண்டார்.
அத்துடன் 13 வது திருத்தச் சட்டமூலத்தை தாம் நீண்டகால கொள்கையாகக் கொண்டுள்ளதாகவும்; அந்தவகையில் தான் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்திற்கும்; ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தாh. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தவறிழைக்கும் பட்சத்தில் அதனைத் தாராளமாக விமர்சிக்கலாம் என்பதுடன், தயவு செய்து ஊடகங்கள் மூலமாக சேறுபூச வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment