Friday, November 02, 2012
இலங்கை::சட்டவிரோதமாக ஒஸ்ரேலியா செல்ல முனைந்த 43 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடக மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பேரூவளையில் நேற்யை தினம் கைது செய்யப்பட்ட இவர்களில் 33 ஆண்களும், 8 பெண்களும், இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் பேரூவளை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment