ஜெனீவா::மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை நடத்தி வருவதாக முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இராணுவ வசாரணைகள் ஐம்பது அமர்வுகளைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவ நீதிமன்றம் இதுவரையில் 30 சாட்சிகளிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செனல்4 வீடியோ உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் மிகவும் விரிவான விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஐவர் அடங்கிய இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இராணுவ நீதிமன்றின் தலைமை அதிகாரியாக கிரிசாந்த டி சில்வா கடமையாற்றி வருகின்றார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் உட்பட்சமாக மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment