Friday, November 02, 2012
காஞ்சிபுரம்::கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும், அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமாரை கைது செய்ய வேண்டும். தமிழகத்துக்கு முறையான மின்சாரம் வழங்கி மின்வெட்டை தடுக்கவேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.டி.என்.ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மலையூர் புருஷோத்தமன், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் எஸ்.டி.நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிஜு, மாவட்ட தலைவர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விசுவநாதன் எம்.பி. பேசும்போது, ‘‘மாமல்லபுரத்தில் கரை கடந்த ‘நிலம்’ புயல் இந்த பகுதியை அதிகமாக தாக்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மின்தட்டுப்பாடு பிரச்னையில் தமிழக அரசு மவுனம் சாதிக்கிறது. மத்திய அரசின் ஆதரவு பெற்றால்தான் மின்வெட்டை சரி செய்ய முடியும்’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் அரங்கநாதன், பன்னீர்செல்வம், குப்பன், மகளிர் அணி நிர்வாகி கன்னிகா உள்ளிட்ட 1500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் காங். ஆர்ப்பாட்டம் : உதயகுமார் கொடும்பாவி எரிப்பு!
திருவள்ளூர்::திருவள்ளூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை கைது செய்யக் கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இமாலய அருண்பிரசாத் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ்குமார், ஆவடி தனா, தொகுதி தலைவர்கள் கார்த்திகேயன், மதன் மோகன், பாஸ்கர், திவாகர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. தொடர் மின்வெட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.கே.மனோகரன், பொருளாளர் விக்டரி மோகன், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் விக்டரி எம்.ஜெயகுமார், தர்மபிரகாஷ், அனுராதா அபி, விசுவநாதன், கிளாம்பாக்கம் சிவகுமார், பெருமாள்பட்டு கவுதமன், முல்லை சுரேஷ்பாபு, ஆர்.எம்.வாஞ்சிநாதன், திவாகர், சாய் சீனு, ஜெகன் பாண்டியன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமார் நன்றி கூறினார்...

No comments:
Post a Comment