Friday, November 02, 2012
மீனம்பாக்கம்::துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் மீது திடீரென லேசர் ஒளி பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 251 பயணிகள் உயிர் தப்பினர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்றிரவு 9.45 மணிக்கு சென்னை வந்தது. விமானத்தில் 242 பயணிகள், 9 விமான ஊழியர்கள் உள்பட 251 பேர் இருந்தனர். விமானத்தை தரை இறக்குவதற்காக விமானி, கட்டுப்பாட்டு அறை அதிகாரியிடம் அனுமதி கேட்டார். அவர் அனுமதி அளித்ததும் விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து ஓடு பாதை நோக்கி விமானத்தை செலுத்தினார். அந்த நேரத்தில் ஓடுபாதையின் வடக்கு திசையில் உள்ள பரங்கிமலை மலை உச்சியில் இருந்து, லேசர் ஒளி போன்று ஒரு மர்ம ஒளி விமானத்தை நோக்கி பாய்ந்தது. பச்சை நிறத்தில் இருந்த அந்த ஒளி, மிகவும் பிரகாசமாக இருந்தது.
விமானத்தின் முன்பக்கமாக விமானி முன்புள்ள கண்ணாடி மீது அந்த ஒளி அடித்ததால் விமானி அதிர்ச்சி அடைந்தார். சில நிமிடங்கள் திணறினார். எனினும், சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை விமானி பத்திரமாக தரை இறக்கினார். இதற்கிடையில், அந்த மர்ம ஒளியும் மறைந்தது. விமானி சிறிது அசந்திருந்தால் கூட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி பெரும் விபத்துக்குள்ளாகி இருக்கும். விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 251 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் எழுத்து மூலமாக விமானி புகார் செய்தார். உடனே போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீ சார், ஒளி வந்த பரங்கிமலை உச்சி மற்றும் மலையடிவாரத்துக்கு சென்று விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.
உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் இடத்தில் இருந்து ஒளி வந்ததா அல்லது விமான போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக விஷமிகளின் சதி வேலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் மீதும் வடகிழக்கு பகுதியில் இருந்து ஒளி வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், ஆதம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பணியின் போது, பயன்படுத்திய பிரகாசமான விளக்கில் இருந்து அந்த ஒளி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த விளக்குகளை பறிமுதல் செய்து பொறியாளர் மற்றும் கண்காணிப்பாளர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் அவர்களை விடுவித்தனர்.

No comments:
Post a Comment