Sunday, November 25, 2012

உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

Sunday, November 25, 2012
இலங்கை::உரிய அனுமதியின்றி, துப்பாக்கிகளை தம்வசம் வைத்து கொள்ளும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி வெலிக்கடை சிறையில் ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து, துப்பாக்கிகளை கையளிக்க வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் இதுவரை அந்த அதிகாரிகள் உரிய முறையில், அதனை செய்யவில்லை. அப்படியான அதிகாரிகள் சம்பந்தமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கிகள் பயன்படுத்துவது குறித்து உரிய பயிற்சிகள் இல்லாத சிவில் அதிகாரிகள் ரி.56 ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது பாரிய தவறு எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

புலிகள் செயற்பாடுகள் இரந்த காலத்தில், சிறைச்சாலை அதிகாரிகள் பயன்படுத்த ஆயுதங்களை கோரியிருந்ததுடன், தமது கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment