Sunday, November 25, 2012

இராணுவத்தில் இணைந்த 109 தமிழ் பெண்களில் அறுவர் விலகல்!

Sunday, November 25, 2012
இலங்கை::இராணுவத்தில் அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 109 தமிழ் பெண்களில் ஆறு பேர் விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கிறார்.

இவர்கள் தமது சுயவிருப்பின் பேரிலேயே விலகியதாக அவர் குறிப்பிடுகிறார்.

இராணுவத்தில் கடந்த 17ஆம் திகதி இணைத்துக்கொள்ளப்பட்ட இவர்களில் நான்கு பேர் அன்றைய தினமே இராணுவத்திலிருந்து விலகியதாகவும் ஏனைய இருவரும் அடுத்த நாள் விலகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எஞ்சிய 103 பேருக்கான இராணுவப் பயிற்சி நடவடிக்கைகள் கிளிநொச்சி இராணுவ முகாமில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறும் எனவும் அந்த சந்தர்ப்பத்தில் இராணுவ சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் அதற்கென விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment