Sunday, November 25, 2012

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு டிச. 21ம் தேதி ஆஜராக விஜயகாந்துக்கு உத்தரவு!

Sunday, November 25, 2012
பெரம்பலூர்::தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் 21ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பெரம்பலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மேற்கு வானொலி திடலில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நரிக்குற இனத்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக முதல்வரை அவர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வகையில் அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது பெரம்பலூர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வக்கீல் குலோத்துங்கன், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் டிசம்பர் 21ம் தேதி விஜயகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment