Sunday, November 25, 2012

தமிழ் பத்திரிகைகளில் செய்தி பிரசுரமாகவே பாராளுமன்றத்தில் காரசார உரை: அன்று அப்பாவி தமிழ் மக்களின் சேமிப்பை சூறையாடி பலரது தற்கொலைக்கு காரணமானவர் இன்று மனித உரிமைக்காக குரல்: TNA வெளிநாடு செல்வது உறவுகளை சந்திக்கவும், பணம் வசூலிக்கவுமே-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 25, 2012
இலங்கை::இந்த வரவு செலவுத்திட்டம் இலங்கையில் வடபகுதியை முற்றாகப் புறந்தள்ளி வைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இச்சபையில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டில் வடக்கிற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதனை அவரால் அறியமுடியாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வருடத்திற்கென மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மூலதனச் செலவீனம் ரூபா 14 பில்லியன் மாத்திரமே எனவும் அவர் மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட மூலதன செலவீட்டுத் தொகையாக ரூபா 5.1 பில்லியன், மற்றும் 3.8 பில்லியன் ஆகியவை முறையே கிழக்கு மற்றும் வடமாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதனை எவராலும் கண்டுகொள்ள முடியும். இம்மூலதன செலவீன ஒதுக்கீடுகள் ஏனைய சகல மாகாணங்களுக்கான ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக்கூடிய தொகையாகவும் இரண்டாவது மிகக்கூடிய தொகையாகவும் காணப்படுகின்றது.

இது அரசாங்கத்தின் கொள்கையாகிய சமநிலைப்படுத்தப்பட்ட பிராந்திய அபிவிருத்தி மற்றும் இன்று வரை அபிவிருத்தி செய்யப்படாத பகுதிக ளாகிய குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்தல் என்ற அரசின் கொள்கையினை மீள் வலியுறுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த உறுப்பினர் இவ்வாறானதொரு பொய் யான கூற்றை ஏன் கூறியுள்ளார் என எனக்குப் புரியவில்லை. இந்த உறுப் பினர் வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளவில் லையா அல்லது இச்சபையையும் அவரின் ஊடகத்தின் மூலம் வெளி உலகையும் தப்பான வழியில் இட்டுச் செல்வதற்கு முயற்சிக்கின்றாரா என எனக்குப் புரியவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட் டங்களுக்கான மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றி இருந்த தோடு, இம்மாவட்டங்களின் அபிவிருத் திக்கென இத்தகைய பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்டி ருப்பதையும் நன்கு அறிவார். அவர்கள் தமிழ்ப் பத் திரிகைகளில் பிரசுரமாவதற்காகவே இங்கு உரையாற்றுகின்றனர். அவர்கள் அக்கிராசனத்தை நோக்கி உரையாற்றினா லும், அவர்களின் முழுக் கவனமும் பார்வையாளர் கூடத்தில் உள்ள தமிழ் ஊடகங்களை நோக்கியதாக இருப்பதுடன் தமது தப்பான அரசியல் பிரசாரத்தை மேற்கொள்வதையே அவர்கள் மையப் படுத்திக்கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளு மன்ற உறுப்பினர்கள் உலகம் பூராகவும் பொய் உரைப்பது போல் இச்சபையிலும் பொய் பேசுகின்றனர். அதே பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பல தசாப்தங்களுக்கு முன்னர் அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்தவர். அவ் உறுப்பினர், தெற்கில் “சக்விதி” (ஷிakvithi) என்ற நிதி நிறுவனத்தைப் போல் “சப்ரா பினான்ஸ்” (ஷிabra பிinanணீலீ) எனும் பெயரில் மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனமொன்றுடன் தொடர்புடையவர். அந்நிறுவனத்தின் மோசடி செயற்பாட்டால் தமது வாழ்நாள் சேமிப்புகளை வைப்பிலிட்ட அனேகமான மக்கள் இறுதியாக தற் கொலை செய்துகொண்டனர். பெருமளவு அப்பாவி மக்களின் தற்கொலைகளுக்கு காரணமாகயிருந்த இவர் ஓர் கொலை யாளியாக கணிக்கப்பட வேண்டியவர்.

இவர் இன்று மனித உரிமைகளின் இரட்சகரைப் போல் இச்சபையில் உரையாற்றுகின்றார். இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் யாழ்ப் பாணத்தில் அவர்கள் ஆரம்பித்த தின சரிப் பத்திரிகை தான் எல்.ரீ,ரீ.ஈயினரின் அழிவுச் செயற்பாடுகளில் இளைஞர், யுவதிகள் இணைந்துகொள்வதற்கு உற்சாகமளித்ததோடு, இறுதியில் அவர் களின் மரணம் வரை செல்வதற்கும் பொறுப்பாக இருந்தது. அந்தப் பத்தி ரிகை இன்றும் ஊத்தையன் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றது. இப் பத்திரிகை தமிழ் மக்களின் சாபக்கேடு ஆகும். எல்.ரீ.ரீ.ஈ.யினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாக எவற்றை எல்லாம் அழித்தார்களோ, அவற்றையெல்லாம் மூன்று முதல் ஐந்து வருடகால எல் லைக்குள் புனர்நிர்மாணம் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சக பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு ஏன் தெரிய வில்லை என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

எமது நாட்டின் வரலாற்றில் என்றும் எதிர்பார்த்திராத அளவில் மேற்கொள்ளப் படுகின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங் களையும், நல்லிணக்கத்திற்கான நடவ டிக்கைகளையும் தங்கள் கபடத்தனமான அரசியல் வார்த்தைகளால் முட்டுக்கட்டை போட வேண்டாமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் களையும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். முன்னர் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யினரே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என கூறியி ருந்தனர். இவர்கள் எல்.ரீ,ரீ.ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டியதோடு மாத்திரமல்லாது மறை முகமாக அவர்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். தமது சொந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களான அமிர்தலிங்கம், கலாநிதி நீலன் திருச்செல்வம், தங்கத் துரை, பத்மநாபா, ஸ்ரீசபாரட்ணம் மற்றும் ஏனையோர் எல்.ரீ.ரீ.ஈ.யினரால் கொலை செய்யப்பட்ட போதும் கூட அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்குத் தைரியம் இருக்குமானால் எல்.ரீ.ரீ.ஈ னரே தமது தலைவர்களைக் கொலை செய்தார்கள் என்று எழுந்து நின்று கூறட்டும்?

அவர்கள் ஐக்கிய அமெரிக்க இராச் சியத்திற்குச் சென்று இராஜாங்க அமைச் சின் செயலாளர் திருமதி ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்து, தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பத ற்கு அமெரிக்க மக்களின் உதவியை நாடப்போவதாக கடந்த வருடம் கூறி யிருந்தனர். அண்மையில் தமிழ் மக்க ளின் அரசியல் விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு இந்திய விஜய த்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தனர். கடந்த காலங்களிலும் இதேபோன்ற செயற்பாடுகளைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை சர்வகட்சி மாநாட்டுக் குழுவில் பங்கேற்கும் படி அரசாங்கம் அழைப்புவிடுத்த போது அதனை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். சகல அரசியல் கட்சிகளினதும் சம் மதத்துடன் தீர்வொன்றைக் காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுகுழுவில் பங்கு பற்றும் வண்ணம் அரசாங்கம் அவர்களை கேட்டுக்கொண்ட போது, அத் தெரிவுக்குழுவிற்கு பெயர் குறித்து நியமனம் செய்வதற்கு பதிலாக உலகம் பூராகவும் பயணம் செய்து சர்வதேச சமூகத்திற்கு பொய்யான கூற்றுக்களையும் தவறான தகவல்களையும் பரப்புரை செய்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பங்களைச் சந்திப்பதற் கேயாகும்.

அத்துடன் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களின்போது தமது பொய்ப்பிரசார நடவடிக்கைகளுக்காக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பணம் வசூலித் தும் வருகின்றனர். தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும் அரசாங்கம் தம்மிடம் மட்டுமே பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டுமென்றும் அவர்கள் கூறி வருகின்றனர். பிரபாகரனின் மனோநிலைக்கும் இவர்களின் மனோ நிலைக்கும் இடையில் நான் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை அவ்வாறு தான் அவரும் கூறியிருந்தார். பிறர்மீது சேறு பூசுவதற்கு முன்னர் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பழைய வரலாறுகளை புரட்டிப் பார்க்கும்படி சுமந்திரனிடம் நான் வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன். நேரக் கட்டுப்பாடு இல்லாதிருக்குமே யாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களின் பழைய வரலாறுகள் தொடர்பாகவும் என்னால் பல விடயங் கள் எடுத்துச்சொல்ல முடியும். எனது நேர்மை யான அரசியல் வரலாறு காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புத் தலைவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை விட மிக அதிகமளவு விருப்பு வாக்குகள் மூலம் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள் ளனர். இதே காரணத்திற் காகவே 1994ம் ஆண்டிலிருந்து இற்றை வரை மக்கள் என்னை தொடர்ச்சியாகப் பாராளுமன்றத் திற்குத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment