Sunday, November 25, 2012
இலங்கை::யாழ். குடா நாட்டின் சில பகுதிகள் றேகொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் தெரிவித்தார்.
பருத்தித்துறை, மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment