Thursday, November 29, 2012

இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் முன்வைத்த மைக்கல் கிரிம் மீது மோசடி குற்றச்சாட்டு!

Thursday, November 29, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் முன்வைத்த மைக்கல் கிரிம் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை முன்வைப்பதற்காக அவர் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றிடம் இருந்து நிதியை பெற்றுக் கொண்டதாகவும், போலியான தகவல்களை வழங்கி இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக த ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இந்த பிரேரணை அவரால் அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்காக அவருக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை ஒத்திவைக்குமாறு, அமெரிக்காவின் நீதித்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை குறித்து விசாரணை குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment