Friday, November 02, 2012
இலங்கை::இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளில் 10பேரை கைமாற்றிக்கொள்வதற்கு இலங்கை முன்வந்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஓர் பகுதியின் அடிப்படையிலேயே கைதிகளை பரிமாறுமாறு புதுடில்லி ராஜதந்திர ரீதியில் கொழும்புக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைச் சிறைகளில், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களே கூடுதலாக இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிராக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச கடல் எல்லையை மீறியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment