Tuesday, October 2, 2012

Tuesday, October 02, 2012
சென்னை::சென்னை சத்தியமூர்த்தி பவனில் காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள் கடை பிடிக்கப்பட்டது. அங்குள்ள காந்தி, காமராஜர், சாஸ்திரி ஆகியோரின் படத்துக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், காந்தி பிறந்தநாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
நிருபர்களிடம் வாசன் கூறியதாவது: சில்லரை வணிகத்தில் பாஜ இரட்டை வேடம் போடுகிறது. பருவமழை பெய்யாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள நல்ல உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். சோனியா காந்தியின் வெளிநாடு பயணம், மருத்துவ செலவுக்கு 1800 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகிறார். குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அங்கு மாற்று அரசு அமையும். இதனால் தோல்வி பயத்தில் மோடி புலம்புகிறார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 4 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு வாசன் கூறினார். சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வாசன் மரியாதை செய்தார். கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment