சென்னை::சென்னை ஏர்போர்ட்டில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட
்டனர். அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல் திபுஷான் (42) என்பவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூரில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவருடைய பை, சூட்கேசை சோதனையிட்டனர். அதற்குள், சுடிதார் மற்றும் துணிகளுக்கு இடையே ஏராளமான கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் இசை கருவிகள் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.7.5 லட்சம். அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment