Tuesday, October 2, 2012

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலம்!

Tuesday, October 02, 2012
இலங்கை::திவிநெகும சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 இன்று காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர் தலைமையில் மாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாயின.

இதனைத் தொடர்ந்து, மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார்.

குறித்த சட்டமூலம் தொடர்பிலான விவாதம் தற்போது நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

திவிநெகும சட்டமூலத்திற்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து மாகாண சபைக்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment