Wednesday, October 03, 2012
இலங்கை::பலஸ்தீனத்த சுதந்திர தேசமாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காலம் தாழ்த்தாது பலஸ்தீனத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டு, அந்நாட்டு மக்களின் அவலங்களுக்கு உலகத் தலைவர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.காலம் தாழ்த்தி எடுக்கப்படும் தீர்மானங்களில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment